Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (06/05/2018)

தேவனுடைய அன்பு நம்மில் பூரணப்படுதல்!

பிதாவாகிய தேவன், இயேசுவை முழுமையாகவும், முற்றிலுமாகவும் நேசிக்கிறார்;இதுவே பூரணமான அன்பு. சிறிதளவு குறையும் இல்லாமல் தேவன், இயேசுவை தன் முழு இருதயத்தோடும் நேசிக்கிறார். தேவனிடத்தில் இருந்து எந்த ஒரு நன்மையும் பெற தகுதியில்லாத நாம், இயேசு கிறிஸ்துவின் மூலமாக (தேவன் இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த அன்பினால்) தேவனால் ஏற்று கொள்ள படுகிறோம்.தேவன் இயேசுகிறிஸ்துவை எவ்வளவாய் நேசிக்கிறாரோ, அதே வண்ணமாக நம்மையும் நேசிக்கிறார் ஆகையால், அன்பின் காரியத்தில் தேவன் நமக்கும் இயேசுவுக்கும் எந்த வித்தியாசமும் காண்பிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவையே நமக்காக பலியாக தேவன் தந்ததினால், சில சமயம் நம்மை தான் மிகவும் அதிகமாக நேசிப்பது போல கூட தோன்றும். இதோ தேவனுடைய பிள்ளைகள் என்று கூறப்படும் அளவிற்கு நம்மேல் எவ்வளவாய் அன்பு கூர்ந்தார்! கற்பனை செய்து பாருங்கள், தேவனை போலவே இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியானவரும் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார்கள்; என்ன ஒரு அற்புதமான அன்பு!!

இப்பொழுது இதே அன்பினாலே நாம் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாகும். நாம் இதே போல நேசிக்கிறோமா?? நாம் நம்முடைய சொந்த குடும்பத்தினர் (பெற்றோர், கணவன், மனைவி, உடன்பிறப்புகள்), உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் ஆகிய இவர்களை தேவன் நம்மை நேசித்தது போல நேசிக்கிறோமா? தேவன் செய்தது போலவே,  நாம் நம்முடைய அன்பு, நம்மூலமாக நம்மை சுற்றி இருக்கிறவர்களுக்குள்ளும் பாய்ந்து செல்ல அனுமதிக்கிறோமா? அப்படி அனுமதித்தால், நாம் தேவன் தாபரிக்கும் ஸ்தலமாக மாறி விடுவோம்;அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். நம்மில் அநேகருக்கு ஆசீர்வாதங்கள், வரங்கள் இருக்கிறது, ஆனாலும் இத்தகைய அன்பு நம்மில் இல்லாவிட்டால் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாளை தைரியமாக நம்மால் எதிர்கொள்ள முடியாது. ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.தேவனுடைய அன்பினால் நாம் நிறைந்து,அந்த அன்பு நம் மூலமாக மற்றவர்களுக்குள் பாய்ந்து செல்லும் போது தான் நாம் இயேசு கிறிஸ்துவை போல மாற முடியும்.

நீங்கள் இத்தகைய அன்பினால் நடத்தப்படும்போது, உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக காணப்படுகிற எல்லா குறைபாடுகளும், தடைகளும் தேவனுடைய அன்பின் வல்லமையினாலே,

எப்படி பாய்ந்தோடுகிற தண்ணீர் தன் பாதையின் குப்பைகளை தூக்கி எரிகிறதோ,அப்படியே நம்மை விட்டு அகற்றி விடப்படும்.ஒரு நதி பாய்ந்து இறுதியில் கடலில் கலந்து ஒன்றாகுவது போலவே, நாமும் இந்த அன்பு நம்மூலமாக பாய்ந்து செல்ல அனுமதிக்கும்போது, நாம் பரிசுத்தமாக்கப்படுவதுமல்லாமல், தேவனோடு காலா காலமாக ஒன்றாகி வாழ்கிற அனுபவத்தை அடைந்து விடுவோம். தேவன் தாமே இவ்விதமான அன்பை நம் உள்ளங்களில் ஏற்படுத்துவாராக!!

இத்தகைய அன்பை பெறுவதற்கான ஆரம்பம் எப்படியென்றால், மற்றவர்களுக்காக ஜெபிப்பதின் மூலமாக தேவனுடைய அன்பு நம்மிலும், நம்மூலமாக மற்றவர்களுக்கும் பாய்ந்து செல்ல அனுமதிப்பதாகும்.

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

ஸ்.ர்.மனோகர்.

Recent Audio Sermons

Who is JESUS
This message is a foundation to knowing Jesus, knowing His character and His teaching. The Bible declares, “The people that do know their God shall be strong, and do exploits".

Ruth (Eng-Tamil)
This message is about the life of Ruth. God will give you a new beginning and He can change your situation and give you hope. This sermon was spoken at a meeting in Bangalore during the year 2006.

3 Great Promises (Eng-Telugu)  
This message was spoken during a crusade in the year 2001 at Nellore - Andhra Pradesh.

Wounds of Jesus (Eng-Telugu)
This message was spoken during a crusade in the 1990's at Nellore - Andhra Pradesh.

Knowing the Holy Spirit
Many people know 'about' the Holy Spirit but very few know the Holy Spirit personally. This message will lead you to know the Holy Spirit.