Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (07/01/2018)

எழுப்புதல்

தேவன், தம்முடைய இரண்டாம் வருகைக்கு முன்பதாக, மறுபடியும் ஒருமுறை இந்த பூமியின் மேல் தம்முடைய எழுப்புதலை அளவில்லாமல் ஊற்ற போகிறார்.

கிறிஸ்து இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்  என்று மிகுந்த ஆசையோடும், வாஞ்சையோடும் யாரெல்லாம் அவரை தேடி கொண்டிருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையினால் நிரப்படுகிற பாத்திரமாய் விளங்குவதுமல்லாமல், ராஜாவை அவருடைய மகிமையில் கண்டு,அறிந்து கொள்வார்கள்.

ஆசீர்வாதம்,வல்லமை மற்றும் செழிப்பான வாழ்வுக்காக மட்டும் தேவனை தேடுபவர்கள் நிச்சயமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஆனால் கிறிஸ்து இயேசுவை மட்டுமே தங்கள் ஆசையாய்/வாஞ்சையாய்  கொண்டுள்ளவர்கள் தான் அவரை முழுமையாய் அறிந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மூலமாக தேவனின் அசாதாரணமான அன்பும், வல்லமையும் இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய ஞானத்தின் எண்ணற்ற அம்சங்களும், பரலோக ராஜ்யத்தின் அதிகாரங்களும் வெளிக்காட்டப்படும்.

தேவ சபையின்மத்தியிலே (ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே)  உலாவுகிற   நம்முடைய தேவன் தம்முடைய சபையிலே அறியப்பட்டு, புகழப்படுவார். ஆகையால் யாரெல்லாம் தங்களை தாழ்த்தி, மனம்திரும்புகிறார்களோ, அவர்களெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்; மற்றவர்கள் அழிந்து போவார்கள். சபையிலும், ஊழியத்திலும் தங்களுக்கு "எல்லாம் தெரியும்" என்று யாரெல்லாம் நினைத்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய இந்த வெளிப்படுதலை தவற விட்டு விடுவார்கள்.

பார்வையற்று இருந்த பர்திமேயு, முதலாவது இயேசுவை பற்றி கேள்வி மட்டும் பட்டிருந்தான். பின்னர் இயேசு அவன் கண்களை திறந்த போது, இயேசுவை கண்டான். "இயேசுவை அறிந்திருந்தான்" மற்றும் "பார்வையடைந்தான்" என்ற இந்த இரண்டு கணங்களுக்கிடையே நடந்தது என்னவென்றால் "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று அவன் கூப்பிட்டு இயேசுவை நிற்க வைத்து தன் விண்ணப்பத்திற்கு பதிலை பெற்று கொண்டான் என்பதாகும்”.  இதே போல் நாமும் தேவனை நோக்கி அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவது தான் "அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்" என்ற நிலைமையில் இருந்து "அவருடைய கடைசி கால எழுப்புதலை பார்க்கவும் அனுபவிக்கவும் போகிறோம்" என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு வரும்.

தேவனே எங்கள் மேல் இரக்கமாயிரும்!

ஸ்.ர்.மனோகர்