Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (15/04/2018)

தேவன் உங்களை நிலைப்படுத்த போகிறார்!

“அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்” ஆதியாகமம்-41:14 இதுவே யோசேப்பின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் ஆகும்!

தேவன் எங்குமிருக்கிற தம்முடைய எல்லா பிள்ளைகளின் வாழ்க்கையிலும் "சிறப்பாக குறிப்பிடக்கூடிய முக்கியமான" தருணங்களை கொண்டு வருகிறார். ராஜாவின் முன்பாக நாம் நிற்க வேண்டிய வேளை சமீபமாயிற்று! கர்த்தருக்கு விரோதமாக கலகம் பண்ணுகிற குணம், சுய வாழ்க்கை, இருள் மற்றும் அடிமைத்தனமாகிய அனுபவங்களிலிருந்து தேவன் நம்மை வெளியே கொண்டு வருகிறார். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை, உலகப்பிரகாரமான வாழ்க்கை, கையின் பிரயாசங்கள், உறவுகள் ஆகிய எவைகளிலெல்லாம், சத்துருவானவன் நம்மை கட்டி வைத்திருக்கிறானோ, அவைகள் எல்லாம் தேவனுடைய கட்டளையால் முறியடிக்கப்பட்டு தேவனுக்கு முன்பாக நிற்க பாத்திரவான்களாக மாற போகிறோம்! "ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்" என்று வெளிப்படுத்துதல்-7:15 -இல் குறிப்பிட்டிருக்கிறபடியே, தேவனுடைய வருகையை துரிதப்படுத்த நாம் இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் அவரை சேவிக்க வேண்டும் என்பது, தேவன் இந்த கடைசி நாட்களில் நம்மிடத்தில் கட்டாயமாக்க போகின்ற ஒரு வேலையாகும்.

“தேவ ஆவியை உடைய மனுஷன்” என்று எப்படி பார்வோன் யோசேப்பை குறித்து சாட்சி கொடுத்தானோ, அப்படியே இந்த கடைசி நாட்களில் “தேவனுடைய ஆவியை உடையவர்கள் “என்று உங்களை குறித்தும் சாட்சி பகரப்படும்!

"பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து" என்பதை போல பரலோகத்தின் தேவனாகிய நமதருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம்மை கனப்படுத்தி தம்முடைய அதிகாரத்தினால் நம்மை முத்திரிக்கிறார். தேவன் உங்களை அதிகாரமும் வல்லமையுமுள்ளவர்களாய் நிலைப்படுத்தபோகிறார்!

தம்முடைய வருகைக்கு முன்பாக அவருடைய பிள்ளைகளை போஷிப்பதற்காக, “எஜமான் வரும்போது அப்படிச்செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான்” யோசேப்பை போல அநேகரை தேவன் உலகம் முழுவதும் வெளிச்சத்துக்கு கொண்டு வர போகிறார். இவர்கள், தேவன் தம்முடைய கிரியைகளை தங்களில் நிறைவேற்றி முடிக்க ஒப்புக்கொடுத்தவர்களாக இருப்பதுமல்லாமல், தேவனுக்குரியதல்லாதவற்றிலிருந்து தங்களை சுத்திகரித்து, அதன் மூலம் பரிசுத்தத்தையும், தேவனோடு ஒன்றாக இணையும் மகிமையான அனுபவத்தையும், பெற்றவர்கள் ஆவர்..

இது  மூலமாக  தேவன்  ஒரு  சிறு  கூட்டத்தை  தமக்காக  பிரித்து  எடுத்து, அவர்கள் மூலமாக ஒரு பெரிய  விடுதலையின் ரட்சிப்பை அநேகருக்கு கொடுப்பார்!

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

ஸ்.ர்.மனோகர்.

Recent Audio Sermons

Who is JESUS
This message is a foundation to knowing Jesus, knowing His character and His teaching. The Bible declares, “The people that do know their God shall be strong, and do exploits".

Ruth (Eng-Tamil)
This message is about the life of Ruth. God will give you a new beginning and He can change your situation and give you hope. This sermon was spoken at a meeting in Bangalore during the year 2006.

3 Great Promises (Eng-Telugu)  
This message was spoken during a crusade in the year 2001 at Nellore - Andhra Pradesh.

Wounds of Jesus (Eng-Telugu)
This message was spoken during a crusade in the 1990's at Nellore - Andhra Pradesh.

Knowing the Holy Spirit
Many people know 'about' the Holy Spirit but very few know the Holy Spirit personally. This message will lead you to know the Holy Spirit.