Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (22/04/2018)

சுயத்துக்கு பதிலாக இயேசு கிறிஸ்து!

ஆதாமின் மூலமாக நம்முடைய ஆத்துமாவுக்குள் வந்த சுயத்தை இயேசு கிறிஸ்து அகற்றும் போது, அவர் தாமே [நம்முடைய ஆத்துமாவில் அந்த இடத்தை] தம்மால் நிரப்புவார். எஸ்தர்-8 :2 இல் எப்படி ஆமானுக்கு பதிலாக மொர்தெகாய் ஏற்படுத்தப்பட்டானோ, அப்படியே உங்களை தேவனோடு ஒன்றாக விடாமலும், உங்களை முழுவதுமாக இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க விடாமலும் உங்களுக்குள் இருந்து தடை செய்து கொண்டிருக்கிற சத்துருவானவன் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு,  உங்களை இத்தனை ஆண்டுகளாக அழித்து கொண்டிருந்தவைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு (எஸ்தர் 7: 6 ,10 ), பரலோகத்தின் மொர்தெகாயாகிய இயேசு கிறிஸ்து உங்களுக்குள் தமுக்குரிய சரியான இடத்தை திரும்ப பெற்று கொள்வார். அவர் உங்களை ஆளுகை செய்து, உங்களுக்குள் அரசாட்சி செய்வார். இதுவே ஆதியிலிருந்த அவருடைய அநாதி திட்டம் ஆகும்.

பாவத்திலிருந்து விரைவாய் சுத்திகரிக்கப்பட்டாலும், சுயத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட வெகு நாட்கள் ஆகும், ஆனால் தேவன் இந்த கடைசி நாட்களில் சுயத்துக்கு மரிப்பதை கூட வெகு விரைவாக்க போகிறார்! உங்கள் ஆத்துமா பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனோடு ஒன்றாக போகின்றபடியினால், சத்துரு நீங்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டதை கண்டு நடுங்க போகிறான்!

தேவன் தம்முடைய அன்பை தாராளமாக உங்கள் மேல் ஊற்ற போகிறார், சங்கீதம் 23 இல் சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் எல்லாம் உங்கள் அனுபவமாகப்போகிறது! இதுவே பரிசுத்த ஆவியானவரின் முழுமையான நிரப்புதலாகும்! நீங்கள் தொடர்ந்து நாடி, தேடி,. கேட்காத பட்சத்தில் இவைகளை பெற்று கொள்ள மாட்டீர்கள்!

தேவன் தம்முடைய பெரிதான இரக்கத்தினாலே இவைகளை தம்முடைய கனத்திற்காகவும், மகிமைக்காகவும்-தம்முடைய ராஜ்ஜியம் வரவும், தம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யபடுவது போல பூமியிலே செய்யப்படவும் உங்களுக்கு தருகிறார். தேவனிலும், அவருடைய சித்தத்திலும் ஒருங்கிணைந்து காணப்படுங்கள்! தேவனுக்கு உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது அவர் உங்களிலும் நீங்கள் அவரிலும் மகிழ்ந்து களிகூறுவீர்கள்!

கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பாராக!

ஆசீர்வாதமாயிருங்கள்!

ஸ்.ர்.மனோகர்.

Recent Audio Sermons

Who is JESUS
This message is a foundation to knowing Jesus, knowing His character and His teaching. The Bible declares, “The people that do know their God shall be strong, and do exploits".

Ruth (Eng-Tamil)
This message is about the life of Ruth. God will give you a new beginning and He can change your situation and give you hope. This sermon was spoken at a meeting in Bangalore during the year 2006.

3 Great Promises (Eng-Telugu)  
This message was spoken during a crusade in the year 2001 at Nellore - Andhra Pradesh.

Wounds of Jesus (Eng-Telugu)
This message was spoken during a crusade in the 1990's at Nellore - Andhra Pradesh.

Knowing the Holy Spirit
Many people know 'about' the Holy Spirit but very few know the Holy Spirit personally. This message will lead you to know the Holy Spirit.