Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (25/02/2018)

தேவனை முழுமையாக அடைந்து கொள்ளுவதற்கான பாதை!

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

தேவன் மோசேயை, அவன் இருந்த உயர்ந்த இடமாகிய "பார்வோனின் அரண்மனையிலிருந்து" மிகவும் தாழ்வான "வனாந்தரத்திற்கு பின்புறம்" (ஊழியம் கொள்ளும் அனுபவத்திலிருந்து, தன் மாமனின் ஆடுகளை மேய்ப்பதாகிய ஊழியம் செய்கிற அனுபவத்திற்கு) என்ற நிலைமைக்கு கொண்டு வந்தார். சிறுமைப்படுதல், ஒன்றுமில்லாமை, சுய பெலத்தின் மேல் நம்பிக்கை அற்ற தன்மை, எல்லா திறமைகளையும் நஷ்டம் என்று எண்ணுதல், எல்லா வசதிகளையும் நஷ்டம் என்று எண்ணுதல் ஆகிய இவைகளை உள்ளடக்கிய "எல்லாவற்றையும் நஷ்டமென்று" எண்ணுகிற அனுபவம் தான் தேவ பர்வதத்திற்கு ஏறி, தேவனை அடைந்து கொள்ளுவதற்கான பாதை.

அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

 நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்து எப்படி சிலுவையிலே எல்லாவற்றையும் இழந்ததின் மூலமாக நம்மை ஆதாயப்படுத்தி கொண்டாரோ, அப்படியே நாமும் நம்முடைய பழைய மனிதனாகிய ஆதாமுக்கு சொந்தமான எல்லாவற்றையும் இழந்தால் தான் தேவனை முழுமையாக அடைந்து கொள்ள முடியும். எனவே தான் தேவன் தமக்கு சொந்தமான பிள்ளைகளை ("வனாந்திர அனுபவம்”/”ராஜ அரண்மனையிலிருந்து-சிறைச்சாலைக்கு செல்லும் அனுபவம்”/”எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணுகிற அனுபவம்”) என்கிற, தம்மை முழுமையாக அடைந்து கொள்ளுகிற பாதையின் அனுபவத்திற்கு கொண்டு வருகிறார். அவர் நம்மை நிரப்புவதற்கு முன்பாக நம்மை வெறுமையாக்குகிறார்! அவர் தம்முடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு கொண்டு சென்று தம்முடைய மகிமையை நமக்கு வெளிப்படுத்துவதற்கு முன்பாக நம்முடைய சுயத்தை நிர்மூலமாக்குகிறார்!

எல்லாவற்றிக்கும் மேலாக, மிகுந்த சந்தோஷத்துடன் தேவனுடைய சித்தத்தை மட்டுமே செய்ய விரும்புகின்ற ஒரு வாழ்விற்கு நம்மை கொண்டு செல்லவே, தேவன் நம்மை மேற்கூறிய பாதையில் நடத்துகிறார். இயேசு கிறிஸ்து "கெத்செமனேயின் வேதனை", "கபத்தாவின் அவமானம்", "கொல்கொதாவின் சித்ரவதை" ஆகிய இவைகளை விட தேவனின் சித்தத்தை செய்ய மிகவும் விரும்பினது போல நாமும் நம்முடைய சிந்தனை, வார்த்தை, செயல் ஆகிய இவற்றில் (பொது இடங்களிலும், ரகசிய வாழ்விலும்) தேவனுடைய சித்தத்தை மட்டும் செய்யும் போது, தேவனின் கவனத்தை நம்மேல் கொண்டு வந்து அவரை முழுமையாக அடைந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவோம். நம்முடைய வாழ்வில் கடந்து வந்த மற்றும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிற நன்மையான மற்றும் தீமையான (விரும்பத்தக்க/ விரும்பத்தகாத) எல்லா காரியங்களுமே தேவன் "நாம் தேவனிலும், அவர் நம்மிலும் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டிருக்க கூடிய" அனுபத்திற்கு நேராக தேவனால் வழிநடத்தப்படுவதாகும்.

தேவன் விரும்புகின்ற இந்த காரியத்தை செய்ய வாஞ்சையை தந்து, பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு உதவி செய்வாராக!

விசுவாசிப்போம்!

ஸ்.ர்.மனோகர்.

Recent Audio Sermons

Who is JESUS
This message is a foundation to knowing Jesus, knowing His character and His teaching. The Bible declares, “The people that do know their God shall be strong, and do exploits".

Ruth (Eng-Tamil)
This message is about the life of Ruth. God will give you a new beginning and He can change your situation and give you hope. This sermon was spoken at a meeting in Bangalore during the year 2006.

3 Great Promises (Eng-Telugu)  
This message was spoken during a crusade in the year 2001 at Nellore - Andhra Pradesh.

Wounds of Jesus (Eng-Telugu)
This message was spoken during a crusade in the 1990's at Nellore - Andhra Pradesh.

Knowing the Holy Spirit
Many people know 'about' the Holy Spirit but very few know the Holy Spirit personally. This message will lead you to know the Holy Spirit.