Select Language:   English  /  Hindi  /  Telugu  /  Kannada /  Tamil

தகப்பனின் இருதயத்திலிருந்து  (29/04/2018)

கிறிஸ்து  உங்களை  நிரப்புவதினால், சத்துரு உங்களை விட்டு அகன்று போவான்!

பின்பு யோசுவா: “ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவிலே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக” யோசுவா-3:10

தேவன் இதே  காரியத்தை  உங்கள்  உள்ளான  அல்லது தனிப்பட்ட வாழ்விலும்  செய்ய  போகிறார்!

யோர்தான் நதி  இரண்டாக  பிரிந்தது , ஜீவனுள்ள  தேவன்  இஸ்ரவேல்  ஜனங்களின்  மத்தியில்  இருந்தார்  என்பதற்கும் , தேவன்  அவர்களுடைய  எல்லா  சத்துருக்களையும்  அவர்கள்  முன்னின்று  துரத்தி  விட்டு  தேசத்தை அவர்களுக்கு  சுத்ததிந்தரமாக  கொடுப்பார்  என்பதற்கும்  அடையாளமாக  இருந்தது.

தேவன் நம்முடைய வாக்குத்தத்தம்பண்ணப்பட தேசம், நாம் தேவனுடைய வாக்குத்தத்தம்பண்ணப்பட  தேசம் ! நாம் தேவனையும் , அவர் நம்மையும் முழுமையாக அடைந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது . நமக்கு  தந்தருளப்பட்டு  இருக்கிற   பரிசுத்த   ஆவியானவர்  தாமே “ தேவன்  நம்முடைய  உள்ளான  வாழ்க்கையின்  எல்லா  சத்துருகளையும்  துரத்தி  விட்டு,  ஜீவனுள்ள   தேவன்  நம்மை  ஆட்கொள்ள  உதவி  செய்வார்”  என்பதற்கு  அடையாளம்  ஆவார். பரலோகத்தின்  யோசுவாவாகிய  இயேசு  கிறிஸ்து   தாமே  நம்மை  தமக்கென்று  முழுமையாக  எடுத்து , நம்மை  முற்றிலுமாக  ஆட்கொள்ளுவார்.

தேவனே இதை  செய்வார் ! அநேகரை தேவன் இந்த  அனுபவத்திற்குள்  கொண்டு  வருகிறார் . “தேவனின்  குணாதிசயங்களையும்  அவருடைய  சுபாவங்களையும்  அறிந்து  கொள்கிறதான”  வாக்குத்தத்த  தேசத்தின்  கனிகளை  நாம்  புசிக்க  போகிறோம் . இது  தேவனுடைய  விலைமதிப்பிடமுடியாத அன்பு மற்றும் கிருபையினால்  செய்யபடுவதனால்,  யாரும்  இதன்  மகிமையை  எடுத்து  கொள்ள  முடியாது . நாமெல்லாரும்  தேவனுடைய  பாதத்தில், மிகுந்த  தாழ்மையும்  நன்றியும்  நிறைந்த  மனதோடு  சாஷ்டாங்கமாய்  விழுந்து  அவருடைய  பேரன்பிற்காக  அவரை  தொழுது  கொள்வோம் ! இதுவே  கடைசி  நாட்களின்  பரிசுத்த  ஆவியானவரின்   நிறைவு  ஆகும்.

நீங்கள்  இதற்காக  போராடாமல் , தேவனுடைய  இரக்கங்களின் மேல்  நம்பிக்கையாயிருங்கள் . அன்பிலே  நடந்து  கொள்ளுங்கள் . இயேசு  கிறிஸ்து  உங்களை  ஆசீர்வதிப்பாராக!

ஸ்.ர்.மனோகர்.

Recent Audio Sermons

Who is JESUS
This message is a foundation to knowing Jesus, knowing His character and His teaching. The Bible declares, “The people that do know their God shall be strong, and do exploits".

Ruth (Eng-Tamil)
This message is about the life of Ruth. God will give you a new beginning and He can change your situation and give you hope. This sermon was spoken at a meeting in Bangalore during the year 2006.

3 Great Promises (Eng-Telugu)  
This message was spoken during a crusade in the year 2001 at Nellore - Andhra Pradesh.

Wounds of Jesus (Eng-Telugu)
This message was spoken during a crusade in the 1990's at Nellore - Andhra Pradesh.

Knowing the Holy Spirit
Many people know 'about' the Holy Spirit but very few know the Holy Spirit personally. This message will lead you to know the Holy Spirit.